நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.
ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:
ஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து 'நடிப்பு வராத பொண்ணு' போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
'Dutch courage' ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது 'நடக்காது!' என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; 'ராத்திரி பத்து மணிக்கு' என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி...
சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே
காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது... இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.
புகைப்படம்: யாஹு